முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க. ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் "மல்லி.'

Advertisment

ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிபோன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக ஜே.வி.ஆர். நடித்துள்ளார்.

Advertisment

mm

ஒளிப்பதிவு- பி.கே.எச். தாஸ், இசை- பஷீர், பாடல்கள்- சிதம்பரநாதன், பாண்டிதுரை, எடிட்டிங்- பி.எஸ். வாசு, நடனம்- நாகேந்திர பிரசாந்த், சுரேஷ், ஸ்டன்ட்- ஸ்டன்ட் சிவு, தயாரிப்பு- ரேணுகா ஜெகதீஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- வெங்கி நிலா.

""பெற்றோரின், காதல் எதிர்ப்புக்கு பயந்து வீட்டைவிட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறது. அவர்களுக்கு, ஊரிலுள்ள நண்பர்கள் மூன்றுபேர் அங்குவந்து உதவிசெய்து, அவர்களை ராஜா- ராணிபோல் பார்த்துக்கொள்கிறார்கள்.

மர்மமான முறையில், காதலர்கள் நிஜமாகவே ராஜா- ராணி ஆகிறார்கள். அது எப்படி ஆனார்கள், உதவ வந்தவர் கள் யார்? அவர்கள் யாருக்கு எப்படி அரசாட்சி செய்கிறார்கள்? அவர்களு டைய மக்கள் யார் என்ற கோணத்தில் திரைக்கதை இருக்கும். இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஊர் திரும்புகின்றனர் என்ற வினாக்களுக்கு பதில் சொல்வதுதான் "மல்லி' என்கிறார்'' இயக்குநர் வெங்கி நிலா.